இலங்கை பிரதான செய்திகள்

கடின உழைப்பினால்தான் இந்துக் கல்லூரிக்கு தொழிநுடப் பிரிவு கிடைத்தது – சந்திரகுமாா்

கிளிநொச்சி இந்துக் கல்லூரியில்   தொழிநுட்ப பிரிவை  ஆரம்பிப்பதற்கு நாம் பெரும் போராட்டத்தையே நடத்தியிருந்தோம். ஒரு வலயத்திற்கு ஒரு பாடசாலைக்கே தொழிநுட்ப பிரிவு என்று இருந்த நிலையை மாற்றினோம் அதற்காக வலயக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒரு போராட்டத்தையே நடத்தியிருந்தோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா்.
இன்று 09-02-2017 கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் தொழிநுட்ப  பிாிவு கட்டடத் தொகுதியை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். அங்கு அவா் மேலும் கருத்து தெரிவிக்கையில்
இந்தப் பாடசாலைக்கு தொழிநுட்ப பிரிவை கொண்டு வருவதற்காக நாம் கடந்த காலத்தில்  கடுமையாக உழைத்திருந்தோம், கடந்த உயர்தர பாீட்சை பெறுபேறுகளில் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில்  இந்துக் கல்லூரி மாணவன்  முதல் இடத்தை பெற்ற செய்தி எமது உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கல்வித்துறை தொடர்ந்தும்  பெரும் சவால்களுக்குள் இயங்கி வருகிறது. வளப் பங்கீடுகளில் காணப்படுகின்ற சீரற்ற தன்மை அதிலும் ஆளணி வளப்பங்கீடுகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் போன்ற பல்வேறு காரணங்களினால் நல்ல கல்வியை பெறமுடியாது மாணவச் சமூகம் தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனா்.
கிளிநொச்சி இந்துக் கல்லூரியை சிறந்த பாடசாலையாக மாற்றுவதற்கும் அதற்கான வளங்களை கொண்டு வருவதற்கும் கடந்த காலத்தில் எம்முடன் இணைந்து அதிபரும், வலயக் கல்விப் பணிப்பாளரும் உழைத்திருந்தாா்கள். அது இங்கு நினைவு கூறதக்கது.
மேலும் எதிர்காலத்தில் தொழில் சந்தையில் இலகுவாக தொழிலை பெற்றுக்கொள்ள கூடிய துறையாக தொழிநுட்ப பிாிவு காணப்படுகிறது எனவே மாணவா்கள் அந்த துறையை தெரிவு செய்து கல்வியை தொடர்வது வரவேற்புக்குரியது என்றும் குறிப்பிட்டாா்
 கல்லூரி அதிபா் விக்கினராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளா் க.முருகவேல், மற்றும் அயற்பாடசாலைகளின் அதிபா்கள் மாணவா்கள்  ஆசிரியா்கள் என பலரும் கலந்துகொண்டனா்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.