குளோபல் தமிழச் செய்தியாளர்
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தவர் என கைது செய்யப்பட்டு உள்ள முன்னாள் போராளிகள் மீது கிளிநொச்சி நீதிமன்றில் போதை பொருளை உடமையில் வைத்து இருந்தார்கள் என்றே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகான சபையின் 84 ஆவது அமர்விலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய முயன்றவர்கள் என கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் போது போதை பொருட்களை தம் உடமையில் வைத்து இருந்தார்கள் எனும் குற்ற சாட்டின் கீழ் தான் முற்படுத்தி உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
Spread the love
Add Comment