தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்றையதினம் தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் , உளவுப் பிரிவு கூடுதல் தலைவர் தாமரைக் கண்ணன், சென்னை காவல்துறை ஆணையாளர் ஜோர்ஜ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இச்சந்திப்பின் போது தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஓபிஎஸ் பன்னீர்ச்செல்வம் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா ஆகிய இருவரும் ஆளுனரை சந்தித்து பேசியுள்ள நிலையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஒரே சமயத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசின் உயர்அதிகாரிகளை ஆளுநர் அழைத்து ஆலோசனை நடத்திய ஆளுனர் விரைவில் உள்துறை அமைச்சருக்கு ஒரு விரிவான அறிக்கையை அனுப்பவுள்ளாரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
Add Comment