தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை சென்னையில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து 4 நாட்களாகியும் ஆளுனர் தாமதிப்பது அ.தி.மு.க.வை பிளவுபடுத்தவே என குற்றம் சுமத்தியுள்ள சசிகலா, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு எனத் தெரிவித்ததுடன் இன்று மாற்று வழியில் போராடப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா அணிகளுக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், இரு தரப்பினரும் ஆதரவு ஊர்வலங்களையும் நடத்தி வருகின்ற நிலையில் மோதல்கள் இடம்பெறவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரச்சினைக்குரிய பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Add Comment