இலங்கை பிரதான செய்திகள்

நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை – சமீர சேனாரட்ன

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டை தப்பியோடிவிட்டதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவிற்கு  சென்றுள்ள  சமீர, கொழும்பு ஊடகமொன்றுக்கு  தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒர் பணி நிமித்தம் தாமும் மருத்துவ கல்லூரியின் வேறும் சிலரும் ரஸ்யாவிற்கு  சென்றுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவிற்கான பயணம் மேற்கொள்ள முன்னதாக தாம் இது குறித்து காவல்துறையினருக்கு அறிவித்திருந்தாகவும் நாட்டை விட்டு தப்பிச் செல்ல வேண்டிய எவ்வித அவசியமும் தமக்கு கிடையாது எனவும் விமான நிலையத்திற்கு செல்வதற்கு காவல்துறையினர் உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், டொக்டர் சமீர சேனாரட்ன யாருக்கும் அறிவிக்காமல் ரஸ்யா தப்பிச் சென்றுள்ளதாக சில ஊடகங்களில் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.