இலங்கை பிரதான செய்திகள்

டெனிஸ்வரன் மற்றும் மரிக்கோ யமாமோட்டோ இடையிலான விசேட சந்திப்பு.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜப்பானிய தூதுவராலயத்தின் ஆலோசகர் மரிக்கோ யமாமோட்டோ  அவர்களுக்கும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு  நேற்றயதினம் செவ்வாய்க்கிழமை 14ஃ02ஃ2017 நண்பகல் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த விசேட சந்திப்பில் பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது. விசேடமாக கடந்த ஆண்டு ஜப்பானிய தூதுவரோடு அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் இணைந்து நடாத்திய விசேட சந்திப்பில் புனர்வாழ்வு பெற்ற போராளிகளது வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கான நிதி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது,

அந்த வகையில் நேற்றய விசேட சந்திப்பில் குறித்த நிதிக்கோரிக்கை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன்  அத்தோடு நாட்டின் தற்போதைய அரசியல் நிலைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அந்தவகையில் கடந்த 15 நாட்களாக புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாபிலவு மக்கள் தமது காணிகளை தமக்கு வழங்குமாறு கோரி போராட்டம் நடத்துவது தொடர்பாகவும் அதற்;கு வலு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு வெளிநாட்டு தூதரகங்களும் ஆதரவு வழங்கி, இது தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்புகொண்டு எமது மக்களது உறுதி, மற்றும் அரசால் வழங்கப்பட்ட காணிகளை உடனடியாக மக்களுக்கு மீண்டும் கொடுக்கவேண்டும் என்ற அழுத்தத்தை தெரிவிக்கவேண்டும் என்ற விசேட கோரிக்கையை அவ் ஆலோசகரிடம் அமைச்சர் முன்வைத்துள்ளார். அத்தோடு நீண்ட காலமாக சிறையில் இருக்கும் எமது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாகவும் ஓர் அழுத்தத்தை சகல தூதரகங்களும் அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து வடக்கு மாகாணத்தில் இன்னும் எவ்வளவோ அபிவிருத்திகளை நாம் செய்யவேண்டிய கட்டாய தேவை இருக்கிறது என்றும் அந்த வகையில் மாகாணத்துக்கு கொடுக்கப்படும் குறித்தொதுக்கப்பட்ட நிதிகள் போதாமல் உள்ளதாகவும் அந்தவகையில் இவ்வாறான தூதரகங்களது உதவியுடனேயே பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கமுடியும், ஆகவே அந்தவகையில் ஜப்பானிய தூதரகம் மூலமும் எமது மாகாணத்தின் ஒரு சில அபிவிருத்திகளை செய்வதற்கு தாங்கள் முன்வருவீர்கள் என்று எமது மாகாணமக்கள் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply