குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தம் காரணமாக கணவரை இழந்த பெண்கள் பாலியல் கொடுமைகளை எதிர்நோக்க நேரிடலாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினராலும், தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களினாலும் பாலியல் சித்திரவதைகளை கணவரை இழந்தப் பெண்கள் எதிர்நோக்கி வருவதாகவும் யுத்தம் காரணமாக பெண்கள் இவ்வாறு கணவரை இழந்துள்ளதாகவும் இவ்வாறான பெண்கள் சித்திரவதைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பெண்கள் அதிகாரிகளினால் தொடர்ந்தும் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் அதிகாரிகளும், சிங்கள இராணுவத்தினரும் இவ்வாறு பெண்களை சித்திரவதைக்கு உட்படுத்தி வருவதாகவும் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகும் பெண்கள் உள ரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment