உலகம் பிரதான செய்திகள்

ஐநா அமைதிப்படையின் புதிய தலைவராக ஜீன் பியர் லாக்ரோயிஸ்


ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அமைப்பின்  புதிய தலைவராக ஜீன் பியர் லாக்ரோயிஸ் (Jean-Pierre Lacroix) நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்சைச் சேர்ந்த இவரை ஐ.நா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பை வகித்து வரும் ஹெர்வ் லாட்சூஸ், எதிர்வரும் வரும் மார்ச் மாதத்துடன் ஓய்வு பெறவிருப்பதையடுத்து, அந்தப் பதவிக்கு ஜீன்-பியர்லாக்ரோயிஸ், நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் நாடுகளில் முகாமிட்டு  அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.