Home இலங்கை கேப்பாவிலவுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி போராட்டம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

கேப்பாவிலவுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி போராட்டம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

by admin

கேப்பாவிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமானகப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள, தங்களின் 524 ஏக்கா் சொந்த நிலத்தை தங்களிடம் கையளிக்க கோரி, கேப்பாவிலவு பிலக்குடியிருப்பு மக்கள்,  இன்று வெள்ளிக்கிழமை 18 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றாா்கள். இவா்களின் போராட்டத்திற்கு பல தரப்புகளும் தங்களின் தார்மீக ஆதரவை தெரிவித்து வரும் நிலையில்
இன்று  கிளிநொச்சி பொதுச் சந்தை வா்த்தகர்களும் கேப்பாவிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனா்.
காலை ஒன்பது மணி முதல் கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்கள் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More