இந்தியா பிரதான செய்திகள்

பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது தொடர்பில் விளக்கம் கோரி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்


அதிமுகவின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் தருமாறு கோரி  சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தக்கடிதம்  சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் சிறைச்சாலை முகவரிக்கே அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்திய  நாடாளுமன்ற உறுப்பினர்  மைத்ரேயன் தலைமையில் அதிமுக  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  10 பேர் தலைமை தேர்தல் ஆணையாளரைச்  சந்தித்து  அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலர் பதவி என்பது இல்லை எனவும் அதனால்  சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டமை செல்லுபடியற்றது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட  தேர்தல் ஆணையம் எதிர்வரும் 28ம் திகதிக்குள் விளக்கமளிக்குமாறு தெரிவித்து சசிகலாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.. இந்தக் கடிதத்துக்கு பதிலளிக்காவிட்டால் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.