இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை- சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு


யாழ்.பல்கலைகழக மாணவர்கள் படுகொலையுடன் தொடர்புடைய ஐந்து காவல்துறை உத்தியோகஸ்தர்களையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் உத்தரவிட்டு உள்ளார்.

குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ப்பட்ட போதே அவ்வாறு உத்தரவு இட்டார்.

யாழ். பல்கலை கழக மாணவர்களான நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார் சுலக்சன் ஆகிய இரு மாணவர்களும் கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை யாழ்.காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இருவரும் படுகொலை செய்யபப்ட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.காவல் நிலையத்தை சேர்ந்த ஐந்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.