சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக நாடுகள் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய அளவில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் பின்பற்றப்படும் கொள்கைகள் சர்வதேச ரீதியிலும் நாடுகள் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்ட ரீதியாக குடியேறுவோர் நாடுகளுக்கு வரமாக அமைகின்ற போதிலும் சட்டவிரோத குடியேறிகள் நாட்டுக்கு பெரும் தலையிடியாக அமைந்துவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கியய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் போன்றன இதற்காக போராடி வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment