பிரதான இரண்டு கட்சிகளும் நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித:துள்ளார். நாட்டின் பிரதான இரண்டு கடச்pகளையும் நம்பி பயனில்லை என குருணாகலையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கெண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது என்ற போதிலும் மரபு ரீதியில் ஐக்கிய தேசிய கட்சியை விரட்டி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சி பீடம் ஏற்றக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், இந்த இரண்டு கட்சிகளையும் நம்பி பயனில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment