கிளி/புதுமுறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில், இன்று பிற்பகல் 25-02-2017 நிகழ்ந்த பாரிய தீ விபத்தில் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட கிடுகினால் வேயப்பட்ட தற்காலிகக் கொட்டகை முற்றாக எரிந்து சாம்பலாகியது. பிரதேச மக்கள் மற்றும் பொலிசார் பிரதேச சபையினரின் உதவியுடன் தீ அணைக்கப் பட்டுள்ளது இருப்பினும் மின்னிணைப்புக்களற்ற வகுப்பறைத் தொகுதி எப்படி எரிந்தது? என்று இன்னமும் அறியப்படவில்லை
எவ்வாறாயினும் கிளிநொச்சியில் ஒரு தீயணைக்கும் கருவி இல்லாமையினாலே கிளிநொச்சியில் தீவிபத்தினால் ஏற்ப்படும் சேதங்களைக் குறைக்க முடியவில்லை என பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
Spread the love
Add Comment