இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தனியார் பேருந்து ஒன்று கால்வாயில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்ததுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாயக்கிழமை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட விபத்தானது வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பின்மீது மோதியதனால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் யார் என்ற விவரங்கள் வெளியாகாதநிலையில் காயமடைந்த பயணிகள் அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Add Comment