மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுவினர் மீளவும் நாடு திரும்பியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். இந்த நல்லாட்சி அரசாங்க ஆட்சியில் அங்கம் வகிப்போர் பாதாள உலகக்குழு உறுப்பினர்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன்; அரசியல்வாதிகள் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பொரளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளினால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love
Add Comment