இலங்கை

வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – நான் நலம் – வடமாகாண முதலமைச்சர் :


தான் நலமாக இருப்பதாகவும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்  எனவும் வடமாகாணமுதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார்.

இந்தநிலையில் சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவே வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது எனவும்; தற்போது தான் நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது   உடல்நலம் குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும்   வெளியாகியிருந்த தகவல்கள் தவறானவை எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்  இவ்வாறான தகவல்களைப் பரப்ப வேண்டாமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.