விளையாட்டு

மோசமான புனே ஆடுகளம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஐ.சி.சி உத்தரவு

புனே ஆடுகளம் மோசமானது என தெரிவிக்கப்பட்டுள்ள புகார்  தொடர்பில்  எதிர்வரும் 14 நாட்களுக்குள் தங்களுக்கு  விளக்கமளிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் சபை , இந்தியக் கிரிக்கெட் சபையிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியக் கிரிக்கெட் சபையின்  விளக்கத்தை சர்வதேச கிரிக்கெட் சபையின்  பொது மேலாளர் ஜெப் அல்லார்டைஸ், ரஞ்சன் மடுகல்ல ஆகியோர் ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி புனேவில் நடைபெற்றது. முதல் ஓவரில் இருந்தே பந்து, சுழற்சிக்கு சாதமாக செயற்பட்டதால் இரண்டரை நாட்களிலேயே போட்டி முடிவுக்கு வந்ததiயை தொடர்ந்து  ஆடுகளம் குறித்து புகார் எழும்பியமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.