இலங்கை பிரதான செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழக, திருகோணமலை வளாக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது:-

கிழக்குப் பல்கலைக்கழக, திருகோணமலை வளாக ஊழியர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் நேற்றையதினம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களால், ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து மாணவர்களது போராட்டம் கைவிடப்பட்டதுடன், இரவு 10.00 மணியளவில் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து இன்று வளாக ஊழியர்கள் தமக்கான பாதுகாப்பினை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கும் வரை தாம் கடமைகளை பொறுப்பேற்கப்போவதில்லை என தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers