இலங்கை பிரதான செய்திகள்

கலப்பு நீதிமன்றம் அரசியல் ரீதியாக சாத்தியமற்றது – பிரதமர்


கலப்பு நீதிமன்றம் அரசியல் ரீதியாக சாத்தியமற்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தினால் கொழும்பில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாற்று வழிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகின்றது எனவும் கலப்பு நீதிமன்றம் அமைப்பது அரசியல் ரீதியில் சாத்தியமற்ற விடயமாகும் எனவும்  சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு கலப்பு நீதிமன்றம் தொடர்பில் சட்டம் இயற்ற  வேண்டுமாயின் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ள அவர் எல்லோரும் ஒன்றிணைந்து சிறந்த ஓர் மாற்று வழியை பரிந்துரை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • ‘கலப்பு நீதிமன்றம் அரசியல் ரீதியாக சாத்தியமற்றது’, என்ற பிரதமர் திரு. ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து வருத்தமளிக்கின்றது. இலங்கையின் அரசியலமைப்பு, எதோ 2016 ம் தயாரிக்கப்பட்டது போன்று இருக்கின்றது இவரது அறிக்கை.

  இப்படிப்பட்ட இவரின் அரசானது, 2015 ஆண்டில் இடம்பெற்ற ஐ நா மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது, அமெரிக்கா கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. குறித்த அந்த 30/1 தீர்மானத்தில், ‘உண்மையைக் கண்டறியும் மற்றும் இழப்பீடுகள் வழங்கும் பொறிமுறைகளை அமைக்க வேண்டும் என்றும், போரின் போது இழைக்கப்பட்ட மோசமான மீறல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நீதுிபதிகளின் பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கு பரந்தபட்ட அளவில் சட்ட மற்றும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்’, என்றெல்லாம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மேலும், ‘நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான அனைத்துப் பரிந்துரைகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்றும் இந்த வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இத்தனைக்கும் இவர் ஒன்றும் நேற்று, இன்று அரசியலுக்கு வந்தவரல்ல. ஏறக்குறையக் கடந்த 40 வருடங்களாகப் பாராளுமன்ற அங்கத்தவராக இருக்கும் இவர் கடந்த 22 வருடங்களாக ஐக்கியதேசியக் கட்சியின் தலைவராகவும் இருக்கின்றார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவர் ஒரு சட்டத்தரணி என்பது, வேறு விடயம். இவ்வளவு அதியுயர் அரசியல் தகைமைகளைக் கொண்ட இவருக்குத் தனது நாட்டு அரசியலமைப்பினூடாக, ‘2015 ஆண்டுத் தீர்மாத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாது’, என்பது தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கியபோது தெரியாதா?

  இந்நிலையில், ஐ நா மனித உரிமைகள் சபையில் குறித்த 2015 ம் ஆண்டுத் தீர்மானங்களில் குறிப்பிட்டிக்குக்கும் விடயங்களை நிறைவேற்ற, வரும் 2019 பங்குனி வரை இலங்கைக்குக் காலஅவகாசம் வழங்கும் தீர்மானம் ஒன்று முன்வைக்கப் பட்டிருக்கின்றது. இது நிறைவேற்றப்படும் சாத்தியமும் காணப்படுகின்றது.

  ஆக, ஐ நா மனித உரிமைகள் சபையும், இலங்கையின் ஆட்சியாளர்களும் இணைந்து, ‘போரினாலும் மற்றும்
  ஆட்சியாளர்களினதும், பாதுகாப்புப் படையினரினதும் இன்னோரன்ன கொடுமைகளுக்கு ஆளான தமிழர்களை’, ஏமாற்றுகின்றதோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.

  இந்தப் பொல்லாத உலகில் யாரை நம்புவதென்றே தெரியவில்லை?