இந்தியா

உத்தரபிரதேசம், மணிப்பூரில் சட்டசபை வாக்குப்பதிவு – இரோம் சர்மிளாவும் முதல்முறையாக போட்டி


உத்தரபிரதேசத்தில் 6 கட்டமாகவும், மணிப்பூரில் முதற்கட்டமாகவும் வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பமாகியுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபையில் 403 இடங்கள் உள்ள நிலையில் அங்கு 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல்  நடந்து வருகிறது. 5 கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், 6-ஆம் கட்டமாக 49 தொகுதிகளில் வாக்குபதிவு இன்று இடம்பெறுகின்றது.

மேலும் மணிப்பூர் மாநிலத்திலும் முதற்கட்டமாக 38 தொகுதிகளில்  வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது. இந்தத் தேர்தலில் சமூக ஆர்வலரான இரோம் சர்மிளாவும் போட்டியிடுகின்றார்.   ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறக் கோரி 16 ஆண்டுகால மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதி கூட்டமைப்பு என்ற புதிய கட்சியை  ஆரம்பித்து இரோம் சர்மிளா  முதல்முறையாக அரசியல் களத்தில் குதித்துள்ளார்.  இவரது கட்சி சார்பில் 3 வேட் பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.


அசம்பாவிதங்களை தவிர்க்க வாக்குச்சாவடிகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply