அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 43 வயதான ஹர்னிஷ் பட்டேல் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
குடும்பத்தினருடன் அமெரிக்காவில் வசித்துவரும் இவர் பலசரக்கு கடை ஒன்றை நடத்தியுள்ளநிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் மிகவும் பிரபலமானவராகவும், வாடிக்கையாளர்கள், நண்பர்கள் உள்பட அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவராகவும் இருந்து வந்த ஹர்னிஷ் பட்டேலுக்கு எதிரிகள் என்று யாரும் இருந்திருக்கவே முடியாது என அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்தவாரம் அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் இந்தியாவை சேர்ந்த பொறியியலாளரான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment