கூட்டு எதிர்க்கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தை பகிஸ்கரித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடத்தபட்டது.
இந்தக் கூட்டத்தில், கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சில முக்கிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காத காரணத்தினால் கூட்டத்தை பகிஸ்கரித்ததாக கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனினும் இந்தக் கூட்டத்தில் சமால் ராஜபக்ஸ பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment