இலங்கை பிரதான செய்திகள்

அரசாங்கமும் க்ளோபல் தமிழ் போரமும் இணைந்து செயற்படத் திட்டம் ?

ரசாங்கமும் க்ளோபல் தமிழ் போரம் அமைப்பும் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளன. லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் க்ளோபல் தமிழ் பேராம் அமைப்பும் இலங்கை அரசாங்கமும் இணைந்து செயற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

க்ளோபல் தமிழ் போரம் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் ஜெனீவாவில சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான விமர்சனங்களுடன் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட உள்ளதாக தெரிவித்த  க்ளோபல் தமிழ் போரம் அமைப்பின் தலைவர் இமெனுவல் ஆண்டகை குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் உள்ளிட்ட விடயங்களில் திருப்தியடைய முடியாது எனவும்   எனினும் நம்பிக்கையை இழக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers