இலங்கை

வேலையில்லா பட்டதாரிகள் பிரச்சினையை தீர்க்க விசேட குழு – ரவூப் ஹக்கீம்

வேலையில்லா பட்டதாரிகளை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதமர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடாத்தி, தற்போது அதற்கென விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காரைதீவில் 6 நாட்களாக சத்தியாகக்கிரக பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய  ரவூப் ஹக்கீம்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு திறைசேரி அனுமதி கிடைக்காத நிலையில், அவற்றை நிரப்புவதற்காக பிரதமரை சந்தித்து பேசுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் பிரதமரை சந்தித்தபின்னர் அதனை கவனத்திற்கொள்வதாக பிரதமர் வாக்குறுதியளித்தார் எனவும் அதற்கமைய மறுநாள், இதற்காக திறைசேரி மற்றும் பிரதமர் அலுவலர்கள் உள்ளடங்கிய குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உடனடியாக நிரப்பக்கூடிய வெற்றிடங்கள் குறித்து சிபார்சு செய்யுமாறு இக்குழுவிடம் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இந்தக்குழுவின் அறிக்கையின் பின்னர், வேலையற்ற பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான முற்சிகளை மேற்கொள்வோம் எனவும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.