இலங்கை பிரதான செய்திகள்

களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் முன்னாள் இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்பு


களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் இராணுவ சிப்பாய்களுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் களுத்துறைச் சிறைச்சாலைகளுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சமயங் என்ற பாதாள உலகக்குழுத் தலைவர் உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த தாக்குதல்கள் குறித்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் அங்கொட லொக்கு என்ற பாதாள  உலகக்குழு உறுப்பினர் இந்த தாக்குதல்களுடன் தொடர்பு கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
சமயங் உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சில காவல்துறை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers