தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, டெல்லியில் தமிழ் இளைஞர்கள் அமைப்பின் சார்பில் நேற்றையதினம் பேரணி நடைபெற்றுள்ளது. டெல்லியில் உள்ள மண்டி ஹவுஸ் மெட்ரோ புகையிரத நிலையத்திலிருந்து ஜந்தர் மந்தர் வரை இந்தப் பேரணி இடம்பெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் இந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெடுவாசல் கிராம விவசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் பேரணியில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வலியுறுத்தி பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் மனு கொடுத்துள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Add Comment