இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவிற்கு பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் இன்று (06) பகல் ஜகார்த்தாவில் உள்ள Soekarno Hatta சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
இந்தோனேசியா அரசின் சார்பாக அந்நாட்டின் பொதுப் பணிகள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் Basuki Hadimuljono மற்றும் விசேட தூதுக்குழுவினர் ஜனாதிபதியை வரவேற்றனர். இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் பேண்தகு மற்றும் சமநிலையான அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்டு நடைபெறும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி மாநாடு நாளை (07) ஜகார்த்தாவில் ஆரம்பமாகிறது.
ஜனாதிபதி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதுடன் நாளையதினம் முற்பகல் 11.00 மணிக்கு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
Spread the love
Add Comment