இலங்கை பிரதான செய்திகள்

காங்கேசன்துறையில் படையினர் வசமுள்ள காணியினை விடுவிப்பதற்கான கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது


காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான கடிதம், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கப்படும் எனவும்  இதில் காங்கேசன்துறை தல்செவன உல்லாச விடுதிக்கும் ஊறணியில் கையளிக்கப்பட்ட   தற்காலிக இறங்குதுறைப் பிரதேச கடறரைக்கும் இடையில் உள்ள 29 ஏக்கர் நிலப்பரப்பும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்தக் காணியை விடுவிப்பதனால்  250 மீனவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.