இலங்கை பிரதான செய்திகள்

திருகோணமலை – கிண்ணியாவில் டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு

திருகோணமலையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இன்று கிண்ணியாவாசி ஒருவர் திருகோணமலை அரசினர் மருத்துமனையில் உயிரிழந்துள்ளார். கிண்ணியா குறிஞ்சாகேணியைச் சேர்ந்த 43 வயது ஹாலித்,  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  இதன்மூலம் டெங்கு நோய் காரணமாக  கிண்ணியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில்  டெங்குநோய் மேலும் பரவாதவாறு மக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்பகுதியையும் நுளம்புகள் பரவாத வகையில், பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாடசாலை மாணவர்கள், டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை தாற்காலிகமாக மூடுமாறு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனார்த்தனன், மத்திய கல்வி அமைச்சர் அகிலராஜ் காரிவாசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.