கடந்த ஒன்பது நாட்களாக வேலைவாய்ப்புக் கோரி போராட்டம் நடத்தி வரும் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நாளை புதன் கிழமை முதல் தங்களது போராட்டத்தை மனித சங்கிலி போராட்டமாக மாற்றவுள்ளனர் எனவும் அதற்கு அனைவரது ஆதரவையும் வழங்குமாறு வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தாங்கள் ஒன்பது நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை தங்களுக்கான எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என்பதோடு, அரசியல் தமிழ் அரசியல் தலைமைகளும் தங்களின் விடயத்தில் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையில் தங்களின் போராட்டத்தின் வடிவத்தை மாற்றியுள்ளதாகவும் நாளை புதன் கிழமை முதல் மனித சங்கிலி போராட்டமாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வடக்கு மா காணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் இன்று ஒன்பதாவது நாளாக வீதியில் உண்டு உறங்கி நாட்களை கழித்து வரும் நிலையில் பொறுப்பு வாய்ந்த எவரும் அவர்களின் நியாயமான போராட்டத்தை கண்டுகொள்ளாத காரணத்தினால் போராட்ட வடிவத்தை மாற்றவேண்டி எற்பட்டுள்ளது என்று தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் தங்களின் இந்த மனித சங்கி போராட்டத்திற்கு பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட பலரின் ஆதரவையும் கோரி நிற்கின்றனர்
Add Comment