இந்தியா

காவிரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

காவிரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதைக் கண்டித்து தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.  தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து காவிரியாற்று பகுதி வரை தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாகச் சென்று வறண்ட காவிரியாற்றில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தரும புரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக செயல்படுத்தப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமே முடங்கும் வகையில் காவிரியாற்றில் கர்நாடக அரசு நீர்வரத்தை முடக்கி உள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  தெரிவித்துள்ளனர்.

மேலும்  காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் எதையும் கர்நாடக அரசு ஏற்காமல் மறுத்து வருகிறது எனவும் இதை தமிழக விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது எனவும்  உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.