முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பு, குருணாகலில் இரண்டாக பிளவடைந்துள்ளது. குருணாகல் கூட்டுறவு சங்கத் தலைவர் தெரிவு குறித்த வாக்கெடுப்பில் மஹிந்தவின் தரப்பினர் முரண்பட்டுக்கொண்டுள்ளனர்.
அண்மையில் கூட்டுறவுச் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்பட்ட போது அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக மஹிந்தவின் ஆதரவாளர்கள் ஏழு பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இன்றைய தினம் கூட்டுறவுச் சங்கத் தலைவர் தெரிவிற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது மஹிந்தவின் தரப்பினர் தலைவர் தெரிவில் பிளவடைந்து வாக்களித்துள்ளனர்.
Add Comment