விளையாட்டு

ஸ்டீவ் ஸ்மித் – விராட் கோஹ்லியின் மோதலுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபை முற்றுப்புள்ளி


கிரிக்கெட்  விளையாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோஹ்லியின் மோதலுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆட்டமிழந்த ஸ்மித், மூன்றாம் நடுவரை நாடுவதற்கு முன்பாக ஓய்வறையில் உள்ள வீரர்களின் உதவியை நாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பில், மைதானத்தில் விராட் கோஹ்லியும் ஸ்மித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதனைத் தொடர்ந்துஇருநாட்டு கிரிக்கெட் சபைகளும் அறிக்கைள் மூலம் மோதிக்கொண்டன.

இந்நிலையில், பெங்களூர் டெஸ்டில் நடந்த சம்பவம் தொடர்பாக ஐ.சி.சி நடத்தை விதிப்படி எந்த வீரருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்படவில்லை என்பதை உறுதி செய்கிறோம் என தெரிவித்து ஐ.சி.சி. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply