மருந்தகங்கள் பதிவுக்கு உட்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. தற்காலிக அடிப்படையில் இவ்வாறு பதிவுகள் இடைநிறுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் காணப்படும் மருந்தகங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சில மருந்தகங்களில் மருந்தாளர்கள் கிடையாது என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment