அரச சேவையில் பெண்களின் நேர்மை தனித்துவமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிணை முறிமோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த சாட்சியாளர்களின் வாக்கு மூலங்களின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணியின் மகளிர் தின நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
Add Comment