நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயுவை எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, வடகாடு ஆகிய பகுதிகளில் கடந்த 22 நாட்களாக தொடர்ந்து பொதுமக்கள், போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் முதலில் நெடுவாசல் கிராமத்தில் மட்டும் போராட்டம் நடத்தி வந்த வடகாடு கிராமத்தினர் தற்போது தங்கள் கிராமத்திலேயே பந்தல் அமைத்து 5 நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களுயுக்கு ஆதரவாக வடகாட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் இன்றும் போராட்டம் மேற்கொண்ட இளைஞர்கள், பேரணியாக போராட்ட களத்திற்கு வந்து போராட்ட பந்தலில் தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டியுள்ளோம் எனவும் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தற்கொலை செய்ய தயங்க மாட்டோம் என்பதை உணர்த்தவும், உண்மையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Add Comment