உலகம்

நேபாளத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்


நேபாளத்தில் 60 பயணிகளுடன்  பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில்  24 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.    மேற்கு நேபாளத்தின் தேசிய நெடுஞ்சாலையில்  சென்று கொண்டிருந்த பேரூந்து   , வீதி மேடும் பள்ளமுமாக இருந்ததன் காரணமாக  பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேரூந்து  மிக வேகமாக சென்றதனால்  சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.