ஜமெய்க்காவின் குறுந்தூர ஓட்ட வீராங்கனையான ஷெல்லி அன் பிறேசர் பிறைஸ் ( Shelly-Ann Fraser-Pryce ) உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மை அடைந்துள்ளதன் காரணமாகவே இவர் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷெல்லி 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இரண்டு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளதுடன் மூன்று தடவைகள் உலக சாம்பியன்சிப் பட்டத்தை வென்றுள்ளார். 30 வயதான ஷெல்லி எதிர்வரும் 2018ம் ஆண்டில் மீளவும் போட்டிகளில் பங்கேற்க உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment