இந்தியா

ஹரியாணா மாருதி சுசிக்கி தொழிற்சாலை வன்முறை வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு


ஹரியாணா மாருதி  சுசிக்கி தொழிற்சாலை வன்முறை வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது
ஹரியாணா மாநிலத்தில்  உள்ள மாருதி  சுசிக்கி தொழிற்சாலையில் 2012 ஆண்டு  இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் 31 பேர் குற்றவாளிகள்   என  அறிவிக்கப்பட்டுள்ளதுடன்  117 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தின்போது ஆலையின் மனித வள பிரிவு மேலாளர் ஆலை வளாகத்திலேயே எரித்துக் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு  இன்று வெளியானது. இதில் மொத்தம் 148 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த போதும்  குற்றம் நிரூபிக்கப்படாத 117 பேரை விடுவித்த நீதிமன்றம்  31 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தண்டனை வழங்கியுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவத்தின்போது 94 மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், காவல் பணியில் ஈடுபட்டிருந்த 9 போலீஸார் காயமடைந்தனர் என்பதும் காயமடைந்தவா்களில் பெரும்பாலோனோா் ஜப்பானியா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply