நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் பாடசாலையொன்று உருவாக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் , நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்திடம் இது குறித்த கோரிக்கை விடுத்தாகவும் தமது கோரிக்கைக்கு சாதகமான பதிலளித்த இந்திய அரசாங்கம் உதவி வழங்க உள்ளதாகவும், அந்த உதவியுடன் பாடசாலை நிர்மானிக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Add Comment