இலங்கை பிரதான செய்திகள்

கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தினை விடுவிக்க கோரும் போராட்டம் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றம்


முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை விடுவிக்க கோரி கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில்   நேற்று சனிக்;கிழமை   முதல் இருவர் , சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளை தலைமையகத்தின் நுழைவாயில் அருகில் இந்த போராட்டம் இடம்பெறுகின்றது.  கேப்பாப்பிலவு பூர்வீக கிராமம் முழுவதும், இராணுவத்திற்காக சுவீகரிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் சூரிபுரம் என்னும் கிராமத்தில்  குடியேற்றப்பட்டனர்.

எனினும், இந்த வீட்டுத்திட்டத்தில் பல குறைப்பாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ள மக்கள், தங்களை தங்களின் பூர்வீக கிராமங்களில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதற்காக தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கோரி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers