நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் நேற்றையதினம் புகையிர போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்தமையை தொடர்ந்து இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடை பெற்று வருகிறது. இதன்போது இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி ஆகியோரின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து நெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது.
எனினும், இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லையில் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment