மட்டக்களப்பு, காத்தான்குடி கர்பலா வீதியில் இன்று காலை இரண்டு பெற்றோல் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வீடொன்றின் முன்பக்கத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த அவதானித்த பெண்ணொருவர் இதனை காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் குண்டுகளை மீட்டுள்ளனர். மேற்படி குண்டுகள் உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Add Comment