எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, 46பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமுற்றவர்களில் இருவரின் நிலை மிக கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் 150 பேர் இருந்ததாகவும் இதில் பலர் காணாமல் போயுள்ளதனால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் எனவும் உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add Comment