இந்தியா

ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்து திமுக கட்சியினர் முற்றுகைப் போராட்டம் – கனிமொழி உள்ளிட்டோர் கைது


ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை  எனத் தெரிவித்து  இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் முன்னர் திமுக கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்திவருகின்றனர். ரேஷனில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை ஒரு வாரத்தில் உறுதி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என கடந்த வாரம் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்ததனைத் தொடர்ந்து இன்று இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது.  அங்கு உரையாற்றிய  கனிமொழி, ரேஷன் கடைகளில் எந்தப் பொருளையுமே வாங்க முடிவதில்லை எனவும்  அங்கிருக்கும் அரிசி, யாராலும் வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றதெனவும் தெரிவித்தார்.

இந்தநிலையில், கனிமொழி மற்றும் திமுக மகளிர் அணியினர் சிலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply