சோமாலியாவின் தலைநகர் மொகடி{வில் உள்ள பாராளுமன்றம் அருகே இன்று இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில்; குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள பெரும்பாலும் நாட்டின் உயரதிகாரிகள் வரும் விடுதி ஒன்றின் அருகே கார் ஒன்றில் வந்த தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
காயமடைந்த பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment