பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான், சூதாட்ட புகார் காரணமாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றபோது சூதாட்ட தரகர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணையின் போது, தரகர்களுடன் இருந்த பழக்கத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம், இர்பான் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இன்றையதினம் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க தற்காலிக தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் குற்றச்சாட்டுக்கள் குறித்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
Spread the love
Add Comment