மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அதற்கான தகுதிகளை கொண்டிருக்கின்றார்களா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மருத்துவ கல்விக்கான உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யத் தவறும் மாணவர்களுக்கு வேறு துறைகளில் பட்டம் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் மாற்று பட்டமொன்றை பெற்றுக்கொள்ள விரும்பாத மாணவ மாணவியருக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
Add Comment