ஊழியர்களை பாதுகாக்காது நிறுனங்கள் மூடப்படுவது பாரிய குற்றச் செயலாகும் என பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நிலையை கருத்திற் கொள்ளாது நிறுவனங்கள் திடீரென மூடப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பட்டுள்ளார்.
இத்தாலியின் ஸ்கை தொலைக்காட்சி நிறுவனத்தின் நடவடிக்கையினால் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
Add Comment